ஆப்நகரம்

பாஜக ஆட்சியில் ஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறை: டிடிவி கிண்டல்

பாஜக ஆட்சியில் ஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறை அமைச்சர் பதவியை வழங்குவார்கள் என்று டிடிவி தினகரன் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 12 Jul 2018, 10:43 am
பாஜக ஆட்சியில் ஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறை அமைச்சர் பதவியை வழங்குவார்கள் என்று டிடிவி தினகரன் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
Samayam Tamil hqdefault


அமித்ஷா சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது ஹிந்தியில் சொட்டு நீர் பாசனம் பற்றி குறிப்பிட்டார். இதனை மொழிபெயர்த்த ஹெச்.ராஜா சிறுநீர் பாசனம் என மொழிபெயர்த்துக் கூறினார்.

இதனால் நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட ஹெச்.ராஜா சமூக வலைத்தளங்களில் கேலிக்கு ஆளாகியுள்ளார். ஹெச்.ராஜாவை வைத்து பல மீம்ஸ்களையும் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியை அமைப்போம் என கூறுகிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது, நுண் நீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத ஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறையை கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். இதுதான் பாஜகவின் இன்றைய நிலை” எனக் கூறினார்.

அடுத்த செய்தி