ஆப்நகரம்

தமிழிசை இல்லையென்றாலும் தமிழகத்தில் தாமரை மலரும்: வானதி சீனிவாசன்

பாஜகவில் தமிழிசை பங்களிப்பு இல்லையென்றாலும் பாஜக வளரும் என மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறியியுள்ளார்.

Samayam Tamil 5 Oct 2019, 5:12 pm
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார்? என்ற எதிர்ப்பார்ப்பு பரவலாக இருந்து வரும் நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகளின் பெயர் அரசல் புரசலாக வந்து கொண்டிருக்கிறது.
Samayam Tamil 3


தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அரசு உத்தரவின் பேரில், கடந்த மாதம் 8 ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து பாஜக உறுப்பினர் பட்டியலிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். 5 ஆண்டுகளாக தனது பணியை செம்மையாக செய்து வந்த தமிழிசைக்கு கிடைத்த ஆளுநர் பதவியானது, பாஜக அரசு அவருக்கு மகுடம் சூட்டும் விதமாகவே இருந்தது.


இந்நிலையில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளரான வானதி சீனிவாசன், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழிசை ஆளுநராக பதவியேற்று கட்சியில் இருந்து விடுபட்டிருந்தாலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படாது.
அவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாஜக வளர்ந்து கொண்டுதான் இருக்கும் என கூறினார். பின்னர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது மோடியை எதிர்த்து ''Go back Modi'' என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகுவதை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், தமிழர்கள் யாரும் அதுபோன்று ஹாஷ்டேகை டுவிட்டரில் பதிவிடுவதில்லை. இதை பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் இருப்பவர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர் என இவ்வாறு கூறினார். பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் போது டுவிட்டரில் இந்த ஹாஷ்டேக் டிரெண்டாகுவது வழக்கம்.

அடுத்த செய்தி