ஆப்நகரம்

திமுக அனைத்துக்கட்சி கூட்டம்: பா.ஜ.க புறக்கணிப்பு

திமுக சார்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க கலந்துக் கொள்ளாது என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

TNN 23 Oct 2016, 9:41 am
சென்னை: திமுக சார்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க கலந்துக் கொள்ளாது என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Samayam Tamil bjp will not join the dmk organised all party meet
திமுக அனைத்துக்கட்சி கூட்டம்: பா.ஜ.க புறக்கணிப்பு


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய தமிழிசை, அரசியல் ஆதாயத்துக்காக திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க., கலந்துக் கொள்ளாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும், காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம் தற்போதைக்கு தேவையற்றது எனவும், அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவதற்கு முன்னதாக திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், அதில் தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் தேர்தல் நடுநிலையாக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி