ஆப்நகரம்

வீட்டு சுவற்றில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி குழந்தை கடத்தலா? கன்னியாகுமரியில் பீதி !!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டு சுவற்றில் கறுப்பு ஸ்டிக்கரை ஒட்டி , வீட்டு குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் ஊர்மக்கள் வடமாநிலத்தவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Samayam Tamil 23 Feb 2018, 12:53 pm
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டு சுவற்றில் கறுப்பு ஸ்டிக்கரை ஒட்டி , வீட்டு குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் ஊர்மக்கள் வடமாநிலத்தவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Samayam Tamil black stricker outside house wall and child kidnaped in kanyakumari
வீட்டு சுவற்றில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி குழந்தை கடத்தலா? கன்னியாகுமரியில் பீதி !!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகளை வினோதமாக கடத்தும் சம்பவம் நடந்து வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் உள்ள வீடுகளில் இந்த கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது. மேலும் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடுகளில் இருந்து குழந்தைகள் காணமல் போவார்கள் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் சில வீடுகளில் குழந்தைகள் காணாமல் போனதாகவும் தகவல் வெளியானது. வடமாநிலத்தில் இருந்து இங்கே தங்கி வேலை செய்பவர்கள்தான் இந்த சம்பவங்களுக்கு காரணம் என்று பொதுமக்கள் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் மார்த்தாண்டம் பகுதியில் வட மாநில பெண் ஒருவர் குழந்தையை கடத்த முயற்சிப்பதாக கிராம மக்கள் அவரை அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி