ஆப்நகரம்

Cooum River: சென்னை கூவம் ஆற்றில் படகு சவாரி போக ரெடியா?- அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தி படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Jan 2020, 1:35 pm
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசாவரம் என்னும் சிற்றூரில் கல்லாறின் கிளையாறாக கூவம் உருவாகிறது. இந்த இடத்தில் சைவத் தலமான தக்கோலம் அமைந்துள்ளது. சென்னை நகரில் பாயும் மூன்று ஆறுகளில் ஒன்றாக கூவம் உள்ளது.
Samayam Tamil Pandiarajan


இந்த ஆறு மொத்தம் 75 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது. இறுதியாக சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. இதில் தூய நீர் ஓடிய காலக்கட்டத்தில் மீன்பிடி தொழிலும், படகுப் போட்டிகள் நடைபெற்று வந்தன.

ஆனால் சென்னை நகரின் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக கூவத்தின் நிலை மோசமடைந்தது. தற்போது மாசு நிறைந்த ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

வசமா மாட்டப் போகிறாரா ஹெச்.ராஜா?- ஸ்கெட்ச் போட்ட உயர் நீதிமன்றம்!

இதற்காக ”ஒருங்கிணைந்த கூவம் ஆறு சுற்றுச்சூழல் சீரமைப்பு” என்ற திட்டத்தை உருவாக்கி ரூ.3,833.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுப்பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, கழிவுநீர் அகற்று வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளுடன் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையும் கைகோர்த்து பணியாற்றி வருகின்றன.

இந்த திட்டத்தின் முதல்கட்டமாக கூவம் ஆற்றின் ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் கடந்த ஆண்டு நடைபெற்றன. போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் ’ஃபீனிக்ஸ்’ பறவையாக காட்சி தரப் போகும் ஜெயலலிதா...!

அதேசமயம் கூவம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் நடவடிக்கையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் தமிழக அரசு சார்பில் நடந்த விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதையடுத்து பேசிய அவர், கூவம் என்றால் அசுத்தமான ஒரு இடம் என்ற எண்ணம் தான் பலருக்கும் வருகிறது. இதனை மாற்ற தீவிர முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

அச்சமூட்டும் கொரோனா; உஷார் நிலையில் சென்னை ஏர்போர்ட் - எச்சரிக்கை ரிப்போர்ட்!

இன்னும் இரண்டு ஆண்டுகளில் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் முழுவதும் முடிக்கப்படும். அதன்பிறகு நல்ல நீர் ஓடும். படகு போக்குவரத்து தொடங்கப்படும். இதற்காக கோடிக்கணக்கில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று கூறினார்.

அடுத்த செய்தி