ஆப்நகரம்

குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு வீட்டிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலையடுத்து, போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.

TNN 6 May 2017, 9:16 am
சென்னை: நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு வீட்டிற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலையடுத்து, போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.
Samayam Tamil bomb threat to actor turned politician kushboos home
குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்


காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், நடிகையுமான குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை ஆம்புலன்ஸ் அலுவலகத்துக்கு வந்த மிரட்டலையடுத்து, குஷ்புவின் பட்டினப்பாக்கம் இல்லத்துக்கு சென்ற போலீசார், அங்கு சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்துள்ளது. அதனையடுத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Bomb Threat to actor turned politician kushboo's home

அடுத்த செய்தி