ஆப்நகரம்

ஏப்ரலில் புதிய பாடப் புத்தகம்: செங்கோட்டையன்

ஏப்ரல் மாதத்திற்குள் 1,6,9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடப் புத்தகம் தயாராகிவிடும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 22 Feb 2018, 10:31 am
ஏப்ரல் மாதத்திற்குள் 1,6,9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடப் புத்தகம் தயாராகிவிடும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil books for new syllabus will be ready in april says sengottaiyan
ஏப்ரலில் புதிய பாடப் புத்தகம்: செங்கோட்டையன்


சென்னையில் தலைமைச் செயலகத்தில் வைத்து புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்.

அப்போது, “12 ஆண்டுகளுக்கு பின் தமிழக பள்ளிப் பாடத் திட்டம் மாற்றபட உள்ளது. புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கி நவம்பரில் முடிவுற்றது. வரும் கல்வி ஆண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்படும். இதற்கான புதிய பாடப்புத்தகங்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் தயாராகிவிடும்.” என்றார்.

“கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 11ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நிறைய கேள்விகள் இடம்பெற்றன. இதனால், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தடுமாறினார்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான் 11ஆம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி