ஆப்நகரம்

aiadmk ஓபிஎஸ்ஸை நீக்கிய இபிஎஸ்.. இபிஎஸ்ஸை நீக்கிய ஓபிஎஸ்: எங்கே செல்கிறது அதிமுக?

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மாறி மாறி கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டு வருகின்றனர்.

Samayam Tamil 11 Jul 2022, 12:09 pm
ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
Samayam Tamil ops eps


அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நத்தம் விஸ்வநாதன் பொதுக்குழுவில் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், “அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை. கட்சி விதிப்படி ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை. அதிமுக கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமியையும், கே.பி.முனுசாமியையும் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
O Panneerselvam ஓபிஎஸ் சண்டை செய்வாரா? ரவீந்திரன் துரைசாமி கூறுவது என்ன?
ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நான்காண்டுகளுக்கும் மேலாக பனிப்போர் நீடித்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெளிப்படையான மோதலாக வெடித்தது.

இந்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மாறி மாறி கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டு வருவது கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
VK Sasikala சசிகலாவுடன் திவாகரன்: கண்கள் பனிக்க, கட்சிகள் இணைகிறதாம்!
எனவே அதிமுக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிளவுபடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

அடுத்த செய்தி