ஆப்நகரம்

பதவிக்காக லட்சக்கணக்கில் லஞ்சம்- சிக்கிய எம்.எல்.ஏ- நடவடிக்கை எடுக்குமா அதிமுக தலைமை!

அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் மீது, அடுக்கடுக்கான லஞ்சப் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

Samayam Tamil 23 Jul 2019, 9:37 am
சென்னை தி.நகரில் பால் வியாபாரம் செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர் சத்ய நாராயணன். பின்னர் அதிமுகவில் இணைந்த இவருக்கு, 1991-96ல் செங்கோட்டையன் அறிமுகம் கிடைத்தது.
Samayam Tamil TNagar MLA


அதன்பிறகு அதிமுகவில் பல்வேறு பதவிகள் தேடி வந்தன. கடந்த 2011ல் கவுன்சிலர் ஆனார். சென்னை மாநகராட்சியில் அதிகாரம் மிக்க நபராக வலம் வரத் தொடங்கினார். கடந்த 2016ஆம் ஆண்டு தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏவாக உயர்ந்தார்.

இதையடுத்து சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆனார். இந்நிலையில் இவர் எந்தக் காரணமும் இன்றி 130 நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் தனது ஆதரவாளர்களுக்கு புதிய பொறுப்புகள் அளித்துள்ளார். ஒரு வட்டச் செயலாளர் பதவிக்கு ரூ.5 லட்சம், ஒரு பகுதிச் செயலாளர் பதவிக்கு ரூ.10 லட்சம் வசூல் செய்துள்ளார்.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள், சத்ய நாராயணன் மீது லஞ்ச புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணாவின் பாதம் தொட்டு வணங்கிய வைகோ!

ஆனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை. தன் மீதான குற்றச்சாட்டிற்கு பதிலளித்த சத்யா, முதல்வரே எனது வீட்டில் சாப்பிட்டு தான் போகிறார். யாரிடம் வேண்டுமானாலும் போய் புகார் கொடுங்கள்.

ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய மதிப்பென்ன?- நீதிமன்றம் கேள்வி!

என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கெத்தாக கூறுகிறார். இவர் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உண்மையான அதிமுக தொண்டனை யாரும் தொட்டுப் பார்க்க முடியாது; ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்!

அடுத்த செய்தி