ஆப்நகரம்

தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி வழக்குபதிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி!

தேர்தல் கமிஷன் உத்தரவு படி வழக்குபதிவு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

TOI Contributor 19 Jun 2017, 5:09 pm
சென்னை: தேர்தல் கமிஷன் உத்தரவு படி வழக்குபதிவு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil bribing voters in r k nagar tamil nadu cm says case was registered as directed by ec
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி வழக்குபதிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு இடையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடந்தது. அந்த சோதனையில், ஆர்.கே.நகர் தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனால், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தகவல் அறியும்சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "இந்த புகார் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி அனைவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Bribing voters in R K Nagar: Tamil Nadu CM says case was registered as directed by EC

அடுத்த செய்தி