ஆப்நகரம்

கண்டுகொள்ளாத அரசு:உடையும் நிலையில் காவேரி ஆற்றுப் பாலம்!

காவேரி ஆற்றில் அமைக்கபட்ட கதவனை பாலத்தில் உள்ள ஒரு தூண் தண்ணீரில் அரிக்கப்பட்டு தூண் அடியில் எவ்வித பிடிமானம் இல்லாமல் தொங்கிக் கொண்டு உள்ளது.

TNN 24 Jun 2017, 6:55 pm
காவேரி ஆற்றில் அமைக்கபட்ட கதவனை பாலத்தில் உள்ள ஒரு தூண் தண்ணீரில் அரிக்கப்பட்டு தூண் அடியில் எவ்வித பிடிமானம் இல்லாமல் தொங்கிக் கொண்டு உள்ளது.
Samayam Tamil bridge on cauvery river is in danger condition in erode district
கண்டுகொள்ளாத அரசு:உடையும் நிலையில் காவேரி ஆற்றுப் பாலம்!


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள சோழசிரமணிக்கும் - ஈரோடு மாவட்டம் பாசூர் இடையே காவேரி ஆற்றில் குறுக்கே கதவனை பல கோடி செலவில் அமைக்கபட்டது. மின்சாரம் தயாரிக்கவே இந்த கதவனை அமைக்கப்பட்டது. மேலும் நாமக்கல் மாவட்டம் சோழசிரமணி பகுதியிலிருந்து ஈரோடுக்கு செல்ல வேண்டும் என்றால் 30 கீமீ. தூரம் சுற்றி செல்ல வேண்டும். எனவே கதவனையில் போக்குவரத்து சென்று வர 30 அடி கொண்ட பாலம் அமைக்க வேண்டும் என்று இரு மாவட்ட மக்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து காவேரி ஆற்றில் பெரிய, பெரிய கான்கீரிட் தூண்கள் அமைக்கபட்டு கதவனை உடன் மேம்பாலமும் அமைக்கபட்டது.



இந்த பாலம் வழியாக தற்போது கனரக வாகனங்களின் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவேரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வந்த போது கதவனை அடைக்கபட்டு அடிக்கடி தண்ணீர் திறந்து விட்டு மின்சாரம் தயாரிக்க சோதனை நடைபெற்றது. அப்போது கதவனை மூலம் தண்ணீர் திறக்கபட்டதால் பாலத்தின் கீழ் அமைக்கபட்ட கான்கீரிட் தூண் அடியில் உள்ள மண் அரிக்கப்பட்டு தற்போது பாலத்தின் மூன்றாவது தூண் எவ்வித பிடிமானமும் இல்லாமல் தொங்கிக் கொண்டு உள்ளது.



இருந்தாலும் இந்த பாலம் வழியாக இன்று வரை சிறிய வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை போக்குவரத்து நடைபெற்று வருகிறது. எனவே பெரிய விபத்துகள் ஏற்படும் முன்பு இந்த பாலத்தில் நடைபெற்று வரும் போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பழுது அடைந்த பாலத்தினை உடனடியாக சீர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி