ஆப்நகரம்

முன்னேற்ற பாதையில் பயணிக்கும் பட்ஜெட் : முதல்வர் ஓ.பி.எஸ்

முந்தைய பட்ஜெட்களை விட முன்னேற்ற பாதையில் பயணிக்கும் பட்ஜெட் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Feb 2017, 7:28 pm
முந்தைய பட்ஜெட்களை விட முன்னேற்ற பாதையில் பயணிக்கும் பட்ஜெட் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil budget 2017 tn cm ops comments
முன்னேற்ற பாதையில் பயணிக்கும் பட்ஜெட் : முதல்வர் ஓ.பி.எஸ்

மத்திய பட்ஜெட் 2017 குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " முந்தைய பட்ஜெட்டுகளை விட முன்னேற்ற பாதையில் பயணிக்கும் பட்ஜெட், சவாலான சூழலில் அனைத்து அம்சங்களும் சரியாக கையாளப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் இருந்து தமிழகம் அதிகம் ஏதிர்பார்க்கிறது.

தமிழக வறட்சி குறித்து மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது. விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்து முயற்சி பட்ஜெட்டில் தெரிகிறது. வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு சிறப்பு திட்டத்தினை அறிவித்திருக்கலாம்

தமிழகத்தில் நீட் தேர்வு இருக்காது என்பதை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவினர் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கியதை வரவேற்கிறேன். " என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி