ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு: காளையை நீக்கும் பிரிவு சேர்ப்பு

ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தில் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

TNN 21 Jan 2017, 11:45 am
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தில் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
Samayam Tamil bull name removed from particular section in ordinance
ஜல்லிக்கட்டு: காளையை நீக்கும் பிரிவு சேர்ப்பு


பீட்டாவை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கும் பொருட்டு சட்ட வரைவு ஒன்றை தயார் செய்த தமிழக அரசு, அதனை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த சட்ட வரைவு, தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தில் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Bull name removed from particular section in Ordinance

அடுத்த செய்தி