ஆப்நகரம்

ஜல்லிக்கட்டுக்கு ஆன்லைன் பதிவா? -கொதித்தெழுந்த காளை உரிமையாளர்கள்!!

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எதிராக, காளை வளர்ப்போர் நூதன போராட்டத்தை மேற்கொண்டு அனைவரின் கவனத்தை கவர்ந்தனர்.

Samayam Tamil 29 Dec 2019, 10:29 pm
தமிழகம் முழுவதும் வருகின்ற பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் களை கட்டவிருக்கின்றன. இதற்காக காளை வளர்ப்போர் தங்களது காளைகளை உற்சாகமாக ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.
Samayam Tamil ஜல்லிக்கட்டுக்கு ஆன்லைன் பதிவா? -கொதித்தெழுந்த காளை வளர்ப்போர்!!


இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்ப வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண பொங்கல் பண்டிகைக்கு மதுரை வருகிறாரா மோடி?!

இதனால், ஒரு காளை அதிகபட்சமாக ஒன்றிரண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், காளை வளர்ப்போர் விருப்பப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும்.

எனவே, ஆன்லைன் ஜல்லிக்கட்டு முறையை கைவிட வேண்டும் வலியுறுத்தும் காளை வளர்ப்போர், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் நூதன போராட்டம் நடத்தினர்.

ஆடுகளம்: சேவல் சண்டையில் ஈடுபட்ட 8 பேர் கோவையில் கைது

திருவானைக்காவல் மேல கொண்டயம்பேட்டையை சேர்ந்த காளை வளர்ப்போர், தங்களது பத்துக்கும் மேற்பட்ட காளைகளை, ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்வதுபோல அலங்கரித்து தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அலங்கரிக்கப்பட்ட காளைகளின் அணிவகுப்பு, அப்பகுதி மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

அடுத்த செய்தி