ஆப்நகரம்

குளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து; 20 பேர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பேருந்து குளத்தில் கவிழ்ந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 29 Apr 2019, 10:47 am
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பேருந்து குளத்தில் கவிழ்ந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil accident


இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையிலிருந்து அன்னவாசல் வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

பேருந்தை புதுக்கோட்டை மாவட்டம் தாவூது மில்லை சேர்ந்த செந்தில் குமார் ஓட்டியுள்ளார்.

அந்த பேருந்து அன்னவாசல் புதுக்கோட்டை சாலையில் பெருஞ்சுனை என்னும் இடத்தில் சென்றபோது எதிரே லாரி ஒன்று வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த லாரியை முந்த முயன்ற இருசக்கர வாகனம் ஒன்று பேருந்துமீது மோதாமல் இருக்க பேருந்து ஒட்டுனர் பேருந்தை சாலையில் ஓரத்தில் இறக்கிய போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெருஞ்சனையிலிருந்து அன்னவாசல் சென்ற மதியழகன் (24) என்பவர்
தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் பேருந்து கவிழ்ந்ததில் பேருந்தில் சென்ற 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

பின்னர் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டு 108 ஆம்பலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்களை ஏற்றி சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி