ஆப்நகரம்

அதிமுக தோல்விக்கு இதுவே காரணம்: முன்னாள் எம்.பி. சொல்வதை கேளுங்கள்!

அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை அக் கட்சியின் முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 3 Jan 2020, 5:03 pm
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களுக்கு மட்டும் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன. திமுக 14 மாவட்டங்களிலும், அதிமுக 13 மாவட்டங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
Samayam Tamil அதிமுக தோல்விக்கு இதுவே காரணம்


குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவந்த நிலையில் அதிமுக ஆதரவளித்து அந்த சட்டத்தை அமலுக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்தது. இதனால் சிறுபான்மையினர் மத்தியில் அதிமுக மேல் அதிருப்தி உருவாகியது. அது உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்துள்ளது.

முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதிகளில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. ராமநாதபுரம் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் மகனும், மகளும் தோல்வியடைந்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: திமுக கூட்டணி போராட்டம்!

இது தொடர்பாக அன்வர் ராஜாவை சந்தித்து சமயம் தமிழ் சார்பாக கேள்வி எழுப்பினோம். அதிமுகவின் பின்னடைவுக்கான காரணம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், “குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு ஆளும் அதிமுக ஆதரவு அளித்ததால் முஸ்லீம்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலையை எடுத்துள்ளனர். அதனால் எங்கள் மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அதிமுக மீது கடும் அதிருப்தி நிலவுவதால் அதிமுகவினர் போட்டியிட முன்வரவில்லை. அதிமுகவில் போட்டியிட ஆளில்லை என்ற அவமானகரமான நிலையை மாற்றவே என் மகனையும் மகளையும் தேர்தலில் போட்டியிட செய்தேன் கண்டிப்பாக தோற்றுப் போவோம் என்று தெரிந்தே என் மகனையும் மகளையும் தேர்தலில் நிறுத்தினேன்” என்றார்.

TN Local Body Polls Counting Live: உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி - ஸ்டாலின்!

மேலும் அவர், “குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை ஆதரித்த பல கட்சிகள் என்பிஆர், என்சிஆர் ஆகியவற்றிற்கு எதிராக கருத்து தெரிவித்துவருகின்றனர். ஜெகன் மோகன் ரெட்டி, பினராயி விஜயன், நிதீஷ் குமார், நவீன் பட்நாயக் போன்ற முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் என்பிஆர், என்சிஆர் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். அதிமுக அரசும் அந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற முடியும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி