ஆப்நகரம்

கருணாநிதி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு குவியும் தொண்டர்கள்!

ஏராளமான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.

Samayam Tamil 28 Jul 2018, 7:49 am
சென்னை: ஏராளமான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.
Samayam Tamil Karunanidhi Hospital


திமுக தலைவராக கருணாநிதி 50வது ஆண்டை எட்டியுள்ளார். இந்த சூழலில் அவரது உடல்நிலை தொடர்ந்து குன்றிக் காணப்படுகிறது. இதையடுத்து அவரது கோபாலபுரம் இல்லத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு, கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் பதற்றம் உண்டானது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கருணாநிதிக்கு தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பு: காவிரி மருத்துவமனை

மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரும் காவிரி மருத்துவமனைக்கு சென்ற்னார். கருணாநிதி உடல்நிலையைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Karunanidhi: 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி - சிறப்பு தொகுப்பு

அவரது உடல்நலம் குறித்து தகவல் அறிந்து கொள்ள, ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். இதையடுத்து அங்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கலைஞர் கருணாநிதியின் சினிமா பயணம்- சிறப்புத் தொகுப்பு

Cadres outside the hospital where Karunanidhi has been admitted.

அடுத்த செய்தி