ஆப்நகரம்

மின்வெட்டு மூலம் பற்றாக்குறையை சமாளிக்கும் தமிழக அரசு: சிஏஜி அறிக்கை

மின்வெட்டு மூலம் பற்றாக்குறையை தமிழக அரசு சமாளிப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.

TNN 3 Sep 2016, 9:12 am
சென்னை: மின்வெட்டு மூலம் பற்றாக்குறையை தமிழக அரசு சமாளிப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil cag reports says tamilnadu compensates eletricity demand with cut
மின்வெட்டு மூலம் பற்றாக்குறையை சமாளிக்கும் தமிழக அரசு: சிஏஜி அறிக்கை


கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுற்ற நிதியாண்டிற்கான சிஏஜி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு 14,152 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி வளம் பெற்றுள்ள போதிலும், மார்ச் 2015ல் 7,439 மெகாவாட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்முதல் தொகையை செலுத்த முடியாததால் 2010 மற்றும் 2011ல் 5,251 மில்லியன் யூனிட்டாக இருந்த காற்றாலை மின் கொள்முதல், 2014-15ல் 3,963 மில்லியன் யூனிட்டாக கொள்முதல் குறைந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் 8,801 மில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள சிஏஜி அறிக்கை, மின் தொகுப்பு, இடர்பாடுகளை காரணம் காட்டி குறைந்த விலையில் மின் கொள்முதலை நிறுத்தியது நியாயமில்லை என்று தெரிவித்துள்ளது.

சேமிக்கப்பட்ட மின்சாரத்தை உபயோகிப்பது எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாததால் மின் உற்பத்தி கலகத்திற்கு ரூ.470 கோடி கூடுதல் செலவு ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றுவதில் இருக்கும் சிக்கல்களை கலைவதற்காக திட்டமிடப்பட்ட துணை மின் நிலைய பணிகளை விரைவுபடுத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்த செய்தி