ஆப்நகரம்

கவரிங் நகைகள் அடகு வைத்து ரூ.1 கோடி அபேஸ்; தேனியில் ஏமாந்துபோன வங்கி இதுதான்!

கவரிங் நகை மூலம் வங்கியை ஏமாற்றி ரூ.1 கோடி மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.

Samayam Tamil 3 May 2018, 2:59 pm
தேனி: கவரிங் நகை மூலம் வங்கியை ஏமாற்றி ரூ.1 கோடி மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.
Samayam Tamil Covering Jewels
கவரிங் நகை மோசடி


தேனியில் உள்ள கனரா வங்கிக் கிளையில் நகை மதிப்பீட்டாளராக செந்தில் மற்றும் உதவியாளராக வினோத் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கவரிங் நகைகளை வைத்து, வங்கியில் பணம் பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் போலியான பெயர்களில் நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம், அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அதில் பெரும்பாலானவை கவரிங் நகைகள் எனத் தெரியவந்தது. சில நகைகள் இல்லாததும் கண்டறியப்பட்டது. உடனே தேனி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் வங்கி முதன்மை மேலாளர் சுப்பையா புகார் அளித்தார்.

கனரா வங்கி

அதில், சுமார் ரூ.1 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மோசடி சம்பவம் தொடர்பாக தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர். கவரிங் நகை புகார் குறித்த தகவல் பரவியதால், பொதுமக்கள் வங்கி முன் கூடினர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நகைகள் வழங்கப்படும் என்று வங்கி மேலாளர் தெரிவித்தார்.

Canara Bank was cheated Rs.1 crore of Covering Jewels.

அடுத்த செய்தி