ஆப்நகரம்

இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது: கமல் பேட்டி!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்று தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

TNN 2 Nov 2017, 12:31 pm
நடிகர் கமல்ஹாசன் தமிழ் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்று தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil cannot say theres no hindu terror kamal haasan
இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது: கமல் பேட்டி!


நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழ் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் இந்து அமைப்புகள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு,”வலதுசாரிகள் இனி இந்துத்துவ தீவிரவாதம் இல்லை என்று கூறமுடியாது. அது அவர்கள் அணிக்குள் புகுந்து விட்டது. இதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

இப்போது இருக்கும் கேரள மாநிலத்தைப் போல் தமிழ்நாடும் சமூக நீதி வழங்கும் மாநிலங்களுக்கு ஒரு முன்னுதரணமாக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்திற்கு பாஜக கட்சியின் சுப்ரமணிய சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அப்படி இருந்தால் அதற்கு ஆதாரம் வழங்குமாறு கூறியுள்ளார்.

Cannot say there’s no Hindu terror: Kamal Haasan

அடுத்த செய்தி