ஆப்நகரம்

கேப்டன் விஜயகாந்த் அணி: வைகோ பேச்சு

மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், இந்த கூட்டணியை இனி கேப்டன் விஜயகாந்த் அணி என்று அழைக்க வேண்டும் என வைகோ கூறினார்.

TNN 23 Mar 2016, 11:57 am
சென்னை: மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், இந்த கூட்டணியை இனி கேப்டன் விஜயகாந்த் அணி என்று அழைக்க வேண்டும் என வைகோ கூறினார்.
Samayam Tamil captain vijayakanth team vaiko
கேப்டன் விஜயகாந்த் அணி: வைகோ பேச்சு


மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், அவர்கள் இடையே தொகுதி உடன்பாடும் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டணியில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி களம் காணவுள்ளனர்.

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வைகோ கூறியதாவது: மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக கூட்டணியை இனி கேப்டன் விஜயகாந்த் அணி என்று அழைக்க வேண்டும். இந்த கூட்டணி திமுக-வுக்க் உஅச்சைத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கிங் மேக்கர், விஜயகாந்த் கிங். அரசியலில் விஜயகாந்த் மதிநுட்பத்துடன் செயல்படுகிறார். வாக்கு மாறாதவர் விஜயகாந்த். கூட்டணி ஆட்சி தான் நடைபெறும். விஜயகாந்த் முதல்வராக பதவியேற்பது உறுதி என்றார்.

இதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் பேசியதாவது: இந்த தேர்தல் ஒரு அரசியல் போர். கூட்டணியில் தோற்றது போல், தேர்தலிலும் திமுக தோற்கும் என்றார்.

விஜயகாந்த் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். தேர்தலில் திமுக தோற்கும். அமைந்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக கூட்டணிக்கும் அதிமுக-வுக்கும் தான் போட்டி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

அதேபோல், அமைந்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக கூட்டணிக்கும் அதிமுக-வுக்கும் தான் போட்டி. இந்த தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி