ஆப்நகரம்

கஜா புயலால் மான் உள்ளிட்ட விலங்குகள் பலி; காரைக்கால் கடற்கரையில் அதிர்ச்சி!

காரைக்கால்: புயல் பாதிப்பு காரணமாக ஏராளமான விலங்குகள் பலியாகியுள்ளன.

TIMESOFINDIA.COM 17 Nov 2018, 9:39 pm
வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று தமிழகத்தில் கரையைக் கடந்தது. இதில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. நாகையில் புயல் கரையைக் கடக்கும் போது, ஏராளமான விலங்குகளும் உயிரிழந்துள்ளன.
Samayam Tamil Deer


அதில் பாயிண்ட் கலிமெரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் அருகிலுள்ள காடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான மான்கள், குதிரைகள், காட்டுப் பன்றிகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த விலங்குகளின் உடல்கள் காரைக்கால் கடற்கரைப் பகுதியில் ஒதுங்கிக் கிடக்கின்றன.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கஜா புயல் தாக்கம் காரணமாக விலங்குகள் உயிரிழந்திருக்கக் கூடும். அதிகப்படியான மழையும், வலிமை வாய்ந்த காற்றும் வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து விலங்குகளை அருகிலுள்ள பகுதிகளுக்கு இழுத்துச் சென்றிருக்கும்.

காரைக்கால் கடற்கரைப் பகுதியின் பல்வேறு இடங்களில் உயிரிழந்த விலங்குகளின் உடல்கள் கிடக்கின்றன. இது காண்போரை மிகவும் அதிர்ச்சியடையச் செய்வதாகக் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி