ஆப்நகரம்

சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல்

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாம மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தேச துரோக வழக்கு தொடர சேலம் கோர்ட்டில் பெண் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்துள்ளார்.

TNN 15 Sep 2016, 2:31 pm
சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞரான பிரவீனா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகம் ஏன் காவிரி தண்ணீருக்காக தொடர்ந்து முறையிட்டு வருகிறது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
Samayam Tamil case against subbramania swamy comments against cauvery issue
சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல்


இவரது கருத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் விதத்திலும், இரு மாநிலங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் விதத்திலும் இருப்பதாகவும் பிரவீனா குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை நாளை ஒத்தி வைத்து சேலம் தலைமை குற்றவிய நீதிபதி அன்புசெல்வி உத்தரவிட்டார்.

இதனிடையே கன்னட நடிகர் உபேந்திரா தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சுப்ரமணி சுவாமி சொல்வது போல, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடக அரசும் ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பெங்களூரில் வீணாக வெளியேறும் நீரை சரியான முறையில் பயன்படுத்தினாலேயே தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியும் என்று உபேந்திரா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி