ஆப்நகரம்

பிராமண மக்களை இழிவாக பேசியதாக திமுக எம்பிக்கள் மீது புகார்..!

கோவை அருகே தாழ்த்தப்பட்டோர் மக்களை அவமானப்படுத்தி பொது வெளியில் பேசிய திமுக எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனுமன் சேனா சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 May 2020, 8:15 pm
Samayam Tamil 8தாழ்த்தப்பட்டோர் மக்களை அவமானப்படுத்தி பேசியதாக திமுக எம்பிக்கள் மீது புகார்
கோவையில் திமுக எம்பிகள் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மக்களை கீழ்த்தரமாக பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ள பாரத அனுமன் சேனா நிறுவன தலைவர் எஸ்.வி சீதரண், அதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது பேசிய அவர், திமுக எம்பிக்கள் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், ஆர்.எஸ் பாரதி, உள்ளிட்டோர் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை கீழ்த்தரமாக பேசுவதும் பிராமண மக்களையும் இழிவாக பேசி வருவது கண்டனத்துக்குரியது.

மேலும், இவர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தொடர்ந்து அவதூறு பரப்பும் விதத்தில் பேசி வருவதாகவும் இவை அனைத்தும் கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ் ..!

அதுமட்டுமில்லாமல், அரசியல் தளத்தில் தொடர்ந்து சாதிய பிரிவினை வாதத்தை இவர்கள் ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், இந்து மக்களையும், இந்துக்களையும் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுவதாக கூறினார்.

அதன் முன்னதாக அனுமன் சேனா உறுப்பினர்கள் கோவை பேரூர், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திமுகவின் மீது புகார் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி