ஆப்நகரம்

வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் கட்டும் அரசாணை; எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனு!

கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலைய அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Apr 2019, 6:30 pm
கடந்த 1961ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, நில உரிமையாளர்களிடம் உபரியாக இருக்கும் நிலங்களை கையகப்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
Samayam Tamil Chennai_High_Court


இந்த சட்டத்தின் படி, 1979ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் கஸ்தூரி என்பவருக்கு சொந்தமான 96 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அந்த நிலம் பேருந்து நிலையம் கட்ட ஒதுக்கி, கடந்த 2016ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த நரேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அவ்வாறு செய்யாமல் பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது சட்டத்தின் நோக்கத்தையே அழித்துவிடும் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அடுத்த செய்தி