ஆப்நகரம்

தொல்லியில் பட்டயப்படிப்பில் தமிழ் புறக்கணிப்பு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

மத்திய தொல்லியில் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Samayam Tamil 8 Oct 2020, 3:48 pm
தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையை மத்திய தொல்லியல் துறை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள்ளது. இப்படிப்பிற்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி இடம் பெறவில்லை.
Samayam Tamil உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை


இதையடுத்து, செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு வாய்ப்பை மறுப்பதா என மத்திய அரசுக்கு எதிராக கண்டங்கள் எழுந்து வருகின்றன. “மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது” என்று மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்தியாவின் பண்முகத்தன்மையை பாழ்படுத்தி ஒருமைப்பாட்டினை உருக்குலைப்பது ஒன்றையே மத்திய பாஜக அரசு கொள்கையாகக் கொண்டிருக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழ், தமிழர் நலன் புறக்கணிப்பைத் தொடர்ந்து வரும் இந்திய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து குரல் எழுப்புவோம். இதற்கு துணை போகும் தமிழக அரசின் அவலங்களை அம்பலப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு இடமில்லை: திமுக திட்டவட்டம்!

இந்த நிலையில், மத்திய தொல்லியில் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காகவும் விசாரிக்க முறையிடப்பட்டது. தொடர்ந்து, இதனை அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி