ஆப்நகரம்

வழக்குகள் விசாரணை... சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய முடிவு!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் வழக்குகளை வழக்கம்போல் நேரடியாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற நிர்வாகக் குழுவின் இந்த முடிவால் வழக்கறிஞர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 30 Aug 2020, 12:54 am
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நேரடி வழக்கு விசாரணைகள் நடைபெறவில்லை. முக்கியமான வழக்குகள் மட்டும் காணொலிக்காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தன.
Samayam Tamil highcourt


இந்த நிலையில், வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணைகளை வழக்கம்போல் நேரடியாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் இரு நீதிபதிகள் கொண்ட ஆறு அமர்வுகளில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கப்படவுள்ளது. காலையில் மூன்று அமர்வு, மாலையில் மூன்று அமர்வு என வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன.

இ பாஸ் பஞ்சாயத்து... கோர்ட்டில் தமிழக அரசு சொன்னதென்ன?

இரண்டு வாரங்கள் சோதனை அடிப்படையில் நடத்தப்படவுள்ள இவ்வழக்கு விசாரணைகளின்போது யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லையென்றால், அதன் பிறகு தனி நீதிபதிகள் கொண்ட அமர்விலும் வழக்கு விசாரணகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

160 நாட்களுக்கு பிறகு, உயர் நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கப்படவுள்ளதால் வழக்கறிஞர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி