ஆப்நகரம்

தமிழகத்தில் அதிரடியாக நடைபெற்ற ஐ.டி.ரெய்டு: கணக்கில் வராத ரூ.150 கோடி!

தமிழகம் முழுவதும் 22 இடங்களில் நடைபெற்ற வருமான வரிசோதனையில் கணக்கில் வராத ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரி துறை தெரிவித்துள்ளது

Samayam Tamil 29 Oct 2020, 1:58 pm
தமிழகத்தின் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான 22 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மாணவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட கல்விக் கட்டணம் முறையாக வங்கிகளில் செலுத்தப்படாதது, வரி ஏய்ப்பு உள்ளிட்டவைகள் தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் 20க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராத ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரி துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையின் போது கிடைத்த சான்றுகளின்படி, கல்விக் கட்டணங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறை, கணக்கிடப்படாத ரசீதுகள் அறங்காவலர்களின் தனிப்பட்ட கணக்குகளுக்கு அனுப்பப்படுவதையும், அவை ஒரு நிறுவனம் மூலம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடிதம் பொய்... தகவல் உண்மை... மவுனம் கலைத்த ரஜினி!

அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக திருப்பூரைச் சேர்ந்த ஒரு கட்டிடக் கலைஞர் மற்றும் ஒரு ஜவுளி தொழிலதிபர் இருக்கின்றனர் என்றும், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாமக்கலில் கட்டட ஒப்பந்தக்காரர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில், தொழிலாளர் கட்டணங்கள், பொருள் கொள்முதல் போன்றவற்றின் கீழ் போலி செலவுகளை காண்பித்து முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி