ஆப்நகரம்

ஆர்கே நகர் : ஓடும் பஸ்ஸில் கண்டகர் மூலம் பணப்பட்டுவாடா

சென்னை ஆர்கே நகரில் இடைத்தேர்தலை ஒட்டி, ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன.

TNN 6 Apr 2017, 10:56 am
சென்னை : ஆர்கே நகரில் இடைத்தேர்தலை ஒட்டி, ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil cash distribution in rk nagar by election
ஆர்கே நகர் : ஓடும் பஸ்ஸில் கண்டகர் மூலம் பணப்பட்டுவாடா


தேர்தல் தேதி அறிவித்தது முதலாக, ஆர்கே நகரில் ஆளுங்கட்சியினர் பல்வேறு தில்லுமுல்லு செய்வார்கள் என, ஓபிஎஸ் அணியினர், திமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் புகார் செய்துவருகிறார்கள். தேர்தல் ஆணையமும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் புதுப்புது விதங்களில் அந்த தொகுதியில் பணம் கொடுக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு தண்டையார் பேட்டைக்கு சென்று வரும் பேருந்தில் பணப்பட்டுவாடா செய்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

44சி என்ற வழித்தடம் கொண்ட பேருந்தின் நடத்துனர் தான் இந்த வேலையை செய்துள்ளார். இதனை அறிந்த திமுகவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். 2 லட்சம் ரூபாய் இந்த புகாரின் அடிப்படையில் நடத்துனர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரிடம் இருந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 லட்சம் அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பேருந்தும் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்துனர் கோவிந்தராஜன் உள்ளிட்ட நான்கு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
cash distribution in RK Nagar by election

அடுத்த செய்தி