ஆப்நகரம்

காவிரி விவகாரம்: விவசாயிகள் அக். 17,18 ல் ரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் நாளை மற்றும் நாளை மறுநாள்(அக்டோபர் 17 , 18) ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்.

TNN 16 Oct 2016, 1:27 pm
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் நாளை மற்றும் நாளை மறுநாள்(அக்டோபர் 17 , 18) ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்.
Samayam Tamil cauvery issue former train demonstration
காவிரி விவகாரம்: விவசாயிகள் அக். 17,18 ல் ரயில் மறியல் போராட்டம்


காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ம் தேதிக்குள் அமைத்திடுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதுமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவில் மேலாண்மை வாரியத்தில் இடம் பெறும் உப்பினர்கள் பெயரைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளை அறிவுறுத்திவிருந்தது. இதன்படி கர்நாடகம் தவிர மற்ற மூன்று மாநிலங்களும் பிரதிநிதிகள் பெயர்கைள மத்திய நிர்வளத்துறைக்குத் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், அக்டோபர் மூன்றாம் தேதியன்று கடைசி நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடுவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்று எதிர்நிலை எடுத்து, காவிரி மேலாண்மை வரியம் அமைக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

இதற்கு ஏதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரியும் வரும் 17.10.2016 மற்றும் 18.10.2016 தேதிகளில் 48 மணிநேரம் மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என, தமிழநாடு விவசாயிகள் கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.

விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் இந்த போராட்டத்தில் மக்கள் நல கூட்டியக்கம், காங்கிரஸ் உள்ளிட்ட ஏதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி