ஆப்நகரம்

காவிரி விவகாரம்: மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

காவிரி தீர்ப்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

TNN 11 Jul 2017, 5:09 pm
காவிரி தீர்ப்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Samayam Tamil cauvery issue sc to hear karnataka governments plea
காவிரி விவகாரம்: மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை


காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி. நீரும் கேரளாவுக்கு 30 டி.எம்.சி. நீரும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் ஒதுக்கீடு செய்து 2007ஆம் ஆண்டு காவிரி தீர்ப்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் தனித்தனியாக மேல்முறையீடு செய்துள்ளன. இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகள் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. அவற்றை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதாவ் ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.

இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எனவே, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இதனை முன்னிட்டு, கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி