ஆப்நகரம்

காவிரி மேலாண்மை பத்தி தீர்ப்பில் ஒன்னும் இல்லை - தமிழகத்துக்கு பெரிய குண்டை போடும் பெ.மணியரசன் குபீர்

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கு காவிரி நீர் 117.25 டி.எம்.சி.,யாக குறைத்துள்ளது. மேலும் இதில் காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து எதுவும் குறிப்பிடப் படவில்லை என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவரும் காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Feb 2018, 10:05 pm
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கு காவிரி நீர் 117.25 டி.எம்.சி.,யாக குறைத்துள்ளது. மேலும் இதில் காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து எதுவும் குறிப்பிடப் படவில்லை என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவரும் காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil cauvery supervisory board on cauvery water dispute p maniyarasan
காவிரி மேலாண்மை பத்தி தீர்ப்பில் ஒன்னும் இல்லை - தமிழகத்துக்கு பெரிய குண்டை போடும் பெ.மணியரசன் குபீர்

பல ஆண்டுகாளாக நடந்த காவிரி நதி நீர் பங்கீடு குறித்த வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி.,யிலிருந்து 177.25 டிஎம்சி.,யாக குறைத்து தீர்ப்பளித்தது.
தண்ணீர் அளவு குறைத்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதாக வெளியான செய்தியால் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் சற்று மகிழ்ச்சியடைந்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது:
இந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவரும் காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

அதில் தீர்ப்பை முழுவதுமாக படித்துப் பார்த்தேன், அதில் ‘மத்தியர அரசு 6 வாரங்களுக்குள் காவிரி நதி நீர் பங்கீட்டுக்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்’ என்று தான் குறிப்பிட்டுள்ளது. அந்த அமைப்பில் யார் இடம்பெற வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என எதுவும் குறிப்பிடவில்லை.

இதனால் மத்திய அரசு இதைப் பயன்படுத்தி தமிழகத்து பாதகமாக தான் நடந்துகொள்ளும். ஏனெனில் கர்நாடக சட்டமன்றம் தேர்தல் வருவதால் தமிழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டால் பாஜக.,வின் வாக்கு வங்கி பாதிக்கும் என்பதால் இந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதை மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டு தமிழகத்துக்கு பாதகமாக செயல்படும் என்பதில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி