ஆப்நகரம்

Cauvery Water: மகிழ்ச்சியில் தமிழக விவசாயிகள்; மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர்!

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், இன்று காலை மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.

Samayam Tamil 23 Jul 2019, 10:10 am
தென்னிந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Samayam Tamil Mettur Dam


கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 355 கன அடியும், கபினி அணையில் இருந்து 500 கன அடியும் திறக்கப்பட்டது.

பின்னர் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு, இரு அணைகளில் இருந்தும், விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் நேற்று அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்து சேர்ந்தது.

நிலவில் நீர் இருந்தால் எங்களிடம் முதலில் கூறுங்கள் – சென்னை மெட்ரோ ட்வீட்!

இதையடுத்து இன்று காலை மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வந்தடைந்தது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் நீர்வரத்து 213 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

Chennai Rains: சீரான இடைவெளியில் பொளந்து கட்டும் பெருமழை - தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 39.13 அடியாகவும், நீர் இருப்பு 11.64 டி.எம்.சியாகவும் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இன்னைக்கு ஃபுல்லா இருக்கு; அதுவும் செம மழை - சென்னை லேட்டஸ்ட் வானிலை நிலவரம்!

அடுத்த செய்தி