ஆப்நகரம்

காவிரி நதிநீர் பிரச்னை : இடைக்கால மனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா

காரிவியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார்.

TOI Contributor 18 Aug 2016, 7:57 pm
சென்னை : காரிவியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார்.
Samayam Tamil cauvery water release tamil nadu to move supreme court against karnataka
காவிரி நதிநீர் பிரச்னை : இடைக்கால மனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா


ஆகஸ்ட் 17ம் தேதி நிலவரப்படி, கர்நாடகாவில் உள்ள ஹராங்கி, ஹேமாவதி, கிருஷ்ண சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளின் மொத்த நீர் இருப்பு 64.849 டிஎம்சி தண்ணீரும், தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணையில் 27.560 டிஎம்சி தண்ணீர் இருப்பும் உள்ளது.

இந்நிலையில் காவிரி ஆறு மேலாண்மையின் தீர்பின் படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான நீர் திறப்பு இதுவரை கர்நாடக அரசு செய்யவில்லை என உச்சநீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக மற்றும் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதங்களுக்கு இதுவரை பதில் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 1ம் தேதி குறுவை சாகுபடிக்காக ரூ. 54.65 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வில்லை எனில் பயிர் சாகுபாடி பாதிக்கும் விவசாயிகள் துயரத்து ஆள் ஆவர், அதோடு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி