ஆப்நகரம்

காவிரி மேலாண்மை வாரிய தமிழக பிரதிநிதியாக சுப்பிரமணியன் பரிந்துரை

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தமிழக பிரதிநிதியாக காவிரி தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் சுப்பிரமணியனின் பெயரை தமிழக அரசு பரிந்துரைசெய்துள்ளது.

TOI Contributor 1 Oct 2016, 4:28 pm
காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தமிழக பிரதிநிதியாக காவிரி தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் சுப்பிரமணியனின் பெயரை தமிழக அரசு பரிந்துரைசெய்துள்ளது.
Samayam Tamil cauverywaterdispute tamil nandu has selected subramaniyan for cauvery management board representative of tamil nadu
காவிரி மேலாண்மை வாரிய தமிழக பிரதிநிதியாக சுப்பிரமணியன் பரிந்துரை


இவர் பல ஆண்டுகள் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். காவிரி தொழில்நுட்பப் பிரிவின் தலைவராகவும் இருந்து வருகிறார். தமிழகத்தின் பொதுப் பணித்துறையில் மூத்த அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் சுப்ரமணியன் அவர்களுக்கு இருப்பதால் இந்தப் பொறுப்புக்கு உகந்தவராக இருப்பார் என்று இவரை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. நீர் மேலாண்மை, அணை மேலாண்மை குறித்த விவரங்கள் இவருக்கு அதிகமாக தெரியும் என்பதுடன், அது தொடர்பான விவரங்களை அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரியாக சுப்ரமணியன் அவர்களால் இரு மாநில சந்திப்பின்போது எடுத்து வைக்கப்படும் என்று கருதப்படுகிறது.

தமிழகம், கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டு இருந்தது. பாண்டிச்சேரி ஏற்கனவே நியமித்துள்ள நிலையில், இன்து தமிழகம் சுப்பிரமணியனின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் மற்றும் காவிரி மேலாண்மை அணைப்பதில் திருத்தம் கோரி புதிய மனுவை இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று கர்நாடகா அரசு தாக்கல் செய்துள்ளது.
#Cauverywaterdispute- Tamil Nandu has selected Subramaniyan for Cauvery Management board representative of Tamil Nadu

அடுத்த செய்தி