ஆப்நகரம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் சமூகப் போராளி முகிலன் கைது!

திருப்பதியில் மீட்கப்பட்ட சமூகப் போராளி முகிலனை, பாலியல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 7 Jul 2019, 6:15 pm
தமிழகத்தின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் முகிலன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ ஆதாரத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
Samayam Tamil Mugilan


அன்று இரவு மதுரைக்கு ரயில் ஏற, அதன் பின்னர் மாயமானார். 140 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை எழும்பூர் சிபிசிஐடி போலீசார் காட்பாடி வழியாக சென்னை அழைத்து வந்தனர்.

பின்னர் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலனை, சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் முகிலன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதில் அவர் திருமணம் செய்வதாக கூறி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

இதைடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முகிலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் தான், தற்போது முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்டமாக ஆட்கொணர்வு வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் முகிலனை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். இதையடுத்து பாலியல் வழக்கிலும் முகிலனை ஆஜர்படுத்த டிரான்சிட் வாரண்ட் பெற்று, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி