ஆப்நகரம்

நிர்மலாதேவியுடன் தங்கிய தனியார் கல்லூரி பேராசிரியை யார்? - விசாரணை விரைவில்

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 24 Apr 2018, 3:17 pm
விருதுநகர் : அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil nirmala-devi


கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி கடந்த 20ம் தேதிமுதல் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை 25ம் தேதி மீண்டும் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேலும் 10 நாட்கள் விசாரணைக்காக காவல் எடுக்க அனுமதி கோரப்பட உள்ளது.

நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தியதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மேலாண்மை துறை உதவி பேராசிரியர் முருகன் தூண்டுதலின் பெயரிலேயே மாணவிகளிடம் அவ்வாறு தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மற்ற கேள்விகளுக்கு ஆம், இல்லை, ஞாபம் இல்லை போன்ற ஒரு சொல்லில் பதிலளித்துள்ளார்.

தற்போது போலீஸாருக்கு புதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலாதேவி 9 நாட்கள் தங்கியுள்ளார். அங்கு 38 விருந்தினர் அறைகள் உள்ளன. அதில் 215 அறையில் நிர்மலாதேவியும், தூத்துக்குடி தனியார் கல்லூரி பேராசிரியையும் சேர்ந்து ஒரே அறையில் தங்கியுள்ளனர்.
அந்த தூத்துக்குடி பேராசிரியை யார், அவருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவரிடம் விரைவில் அவரை பிடித்து விசாரிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி