ஆப்நகரம்

சசிக்குமார் கொலை வழக்கு: பெங்களூருவில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக, பெங்களூருவில் தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

TNN 6 Nov 2016, 6:36 pm
கோவை: இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக, பெங்களூருவில் தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
Samayam Tamil cbcid police probe in bengaluru about sasikumars dead
சசிக்குமார் கொலை வழக்கு: பெங்களூருவில் சிபிசிஐடி போலீசார் விசாரணை


கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம்தேதியன்று, இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் படுகொலை செய்ப்பட்ட வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை வழக்கு தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேகத்திற்குரிய நபர்களின் படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். ஆனால் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 16-ம்தேதி பெங்களூர் சிவாஜி நகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ருத்ரேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு போலீசார் இர்பான் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கோவை சசிக்குமார் கொலை செய்யப்பட்ட விதமும், பெங்களூர் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ருத்ரேஷ் கொலை செய்யப்பட்ட விதமும் ஒத்து போவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தமிழ சிபிசிஐடி போலீசார் பெங்களூர் சென்று ஆர்எஸ்எஸ் பிரமுகர் ருத்ரேஷ் கொலை தொடர்பாக பெங்களூர் போலீசாருடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

ருத்ரேஷ் கொலை தொடர்பான சில ஆவணங்களை தமிழக சிபிசிஐடி போலீசார் பெற்றுக் கொண்டு சென்னை திரும்பி உள்ளதாக தெரிய வந்துள்ளது. அடுத்தக்கட்டமாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த தமிழக சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
CBCID police probe in Bengaluru about sasikumar's dead

அடுத்த செய்தி