ஆப்நகரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிலவரம் என்ன? உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்!

தமிழகத்தை உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் தற்போதைய நிலவரம் குறித்து, நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

Samayam Tamil 27 Aug 2019, 3:17 pm
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil Chennai High Court


இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஆனால் துப்பாக்கிச்சூடு வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன.

Also Read: வாங்காத கடனுக்கு வட்டி- விவசாயியிடம் மன்னிப்பு கோரிய வங்கி நிர்வாகம்!

இந்த வழக்கில் அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் தற்போது வரை நடைபெற்ற விசாரணை குறித்து, உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில்,

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

* துப்பாக்கிச்சூடு சம்பவம், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் காவல் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், போராட்டக்காரர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Also Read: கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால குளியல் தொட்டி கண்டெடுப்பு!

* பல்வேறு துறைகளிடம் இருந்து ஆவணங்கள் பெறப்பட்டு வருகிறது. இவற்றை சிபிஐ அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வருகின்றனர்.

* சிசிடிவி காட்சிகள் தடயவியல் துறையினரின் ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

* துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Also Read: தாமிரபரணி ஆற்றில் சந்தோஷமாக குளித்த காதல் ஜோடி தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு!

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வரும் செப்டம்பர் 16ஆம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி