ஆப்நகரம்

கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழாய்வு விருது; மீண்டும் உயிர் கொடுத்த மத்திய அரசு!

கருணாநிதி பெயரில் வழங்கப்பட்டு வந்த செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம் சார்பிலான விருதை மீண்டும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 18 Jul 2019, 5:11 pm
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தமிழுக்கு பெருந்தொண்டு ஆற்றியுள்ளார். இவரை தமிழனத் தலைவர் என்று அன்போடு அழைப்பர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க பெரும் பாடுபட்டவர்.
Samayam Tamil Karunanidhi


இதையொட்டி மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் கலைஞர் கருணாநிதி பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக ஆண்டுதோறும் ரூ.1 கோடியை நிதியாக கருணாநிதி வழங்கி வந்தார்.

இதற்கிடையில் கலைஞர் விருதுகள் திடீரென நிறுத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாத நிலையில், இதுதொடர்பாக விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

கக்கன், நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு இலவச வீடுகள்- சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு!

இதனைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

NEET தேர்வே தாங்க முடியல; இதுல NEXT தேர்வா? வேண்டாம் விட்டிருங்க - கனிமொழி கோரிக்கை!

இதில் தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.10 லட்சம் காசோலை, ஐம்பொன்னால் ஆன கலைஞர் மு.கருணாநிதி உருவச் சிலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்.பி ரவிக்குமார், ”ரவிக்குமார் எம்பி எடுத்த முயற்சிக்கு உடனடியாகவே பயன் விளைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உடனே தார் சட்டியை தூக்குங்க- பெரியார் மய்யத்தில் இந்தி மொழி; சர்ச்சையை கிளப்பிய ஹெச்.ராஜா!

அடுத்த செய்தி