ஆப்நகரம்

தமிழகத்தில் அமையவுள்ள 6 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்..!

தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் புதிதாக அமையவுள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Samayam Tamil 23 Oct 2019, 6:16 pm
புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க இந்திய மருத்துவ கவுன்சில் தொழிநுட்ப குழுவின் முடிவுக்கு தமிழக அரசு வரவேற்பு அளித்தநிலையில், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான பட்ஜெட்டையும் அறிவித்துள்ளது.
Samayam Tamil 6


தமிழகத்தில் தற்போது 23 அரசு மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளின் மொத்த இடங்களையும் சேர்த்து புதிதாக அமையப்படும் கல்லூரியுடன் கணக்கிட்டால் 4500 மாணவர் சேர்க்கைகளை நிரப்ப முடியும். இதனால் அதிக அளவு மருத்துவ இடங்களை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழும்.

தீபாவளி பண்டிகை: 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கம்

இதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் தொழிநுட்ப குழுவானது, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்து கல்லூரிகளை அமைக்க முடிவு செய்தது. மேலும் இதற்கான இறுதி ஒப்புதல் வந்ததும் அதற்கான ஏற்பாடுகள் துவங்கும் என அறிவித்தது.

இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதோடு, 6 கல்லூரிகளுக்கும் தலா 195 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழக சார்பில் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் தலா 130 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் அமையவிருக்கும் தனி தனி கல்லூரிக்கும் 325 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கபட்டுள்ளன.

பட்டாசு எப்போது வெடிக்கலாம்: டைம் நோட் பண்ணிக்கோங்க!

பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு மத்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதலால் மேலும் மருத்துவ படிப்புக்கான 900 சீட்டுகள் தமிழகத்தில் கூடியுள்ளது. கல்லூரிகள் அமையவிருக்கும் இடங்களில் சுற்றுப்புற சூழலை ஆய்வு செய்வது, தனியார் இடங்களை கையகப்படுத்துவது போன்ற பணிகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த செய்தி