ஆப்நகரம்

அண்ணா பல்கலைக்கழகம்: சீர்மிகு பல்கலைக்கழகமாக மாற்றப்படுமா?

அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 6 May 2020, 10:56 am
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக்கழகம் என்ற சிறப்பு அந்தஸ்தை ஏற்பது தொடர்பாக மாத இறுதிக்குள் முடிவு எடுக்க மத்திய அரசு தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ளது.
Samayam Tamil அண்ணா பல்கலைக்கழகம்


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக மாற்றுவது தொடர்பாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

தமிழ்நாடு அரசு மத்திய அரசின் அறிவிப்பு குறித்து இறுதி முடிவு எடுக்காமல் இருந்தது. ஆனால் அண்ணா பல்கலைக் கழகம், அண்ணா சீர்மிகு பல்கலைக் கழகம் என இரண்டாக செயல்படும் என அறிவித்ததுடன் அமைச்சர்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

நினைவிடமாகிறதா ஜெயலலிதா இல்லம்?

மத்திய அரசின் முடிவுக்கு அதிகாரபூர்வமாக முடிவு எடுக்காத நிலையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக் கழகமாக மாற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மே 31ஆம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கவேண்டும். இல்லையேல் நாட்டிலுள்ள வேறு பல்கலைக்கழகத்துக்கு இது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்மிகு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு 1000 கோடி ரூ நிதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அதே சமயம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மாணவர் சேர்க்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடக்கும் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி