ஆப்நகரம்

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

TNN 20 Apr 2016, 12:35 pm
புதுதில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
Samayam Tamil centre rejects tn proposal to free rajiv gandhi killers
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு


ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு கடந்த மார்ச் மாதம் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள மத்திய அரசு, அதனை நிராகரித்துள்ளது.

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

முதல் கடிதம் கடந்த 2014-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அனுப்பப்பட்டது. அப்போது அந்தக் கடிதம் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அனுப்பப்பட்ட இந்த கடிதம் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி