ஆப்நகரம்

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 28 Jun 2019, 10:03 am
வடக்கு வங்கக் கடல் பகுதியில் வருகின்ற 30ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rain 1


வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்துள்ளது. தண்ணீா் தட்டுப்பாட்டை போக்க கனமழை வேண்டும் என்ற எண்ணமே மக்களின் மனநிலையாக உள்ளது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாாிகள் கூறியதாவது, மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரா இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதை நோக்கி காற்றும் செல்லும்போது வடதமிழக பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதனிடையே வருகின்ற 30ம் தேதி வடக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அது மேலும் வலுப்பெறக் கூடும். அதை நோக்கி தமிழகம் வழியாக காற்று செல்லும்போது தமிழகத்தில் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அடுத்த சில தினங்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி