ஆப்நகரம்

சென்னையில் அனல் காற்று வீசும்- இதுக்கு ஒரு முடிவே இல்லையா..??

சென்னை: ”தமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனல் காற்று வீசும்” சென்னை வானிலை ஆய்வு மையம்

Samayam Tamil 10 May 2019, 4:56 pm
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனல் காற்று வீசுவது நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னையில் வழக்கம் போல வெயில் தான்
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னையில் வழக்கம் போல வெயில் தான்


தமிழகத்தின் கடலோர மற்றும் வடதமிழக மாவட்டங்களில் பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. எனினும், பகலில் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும். ஆனால் சென்னையில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரகனூர் மற்றும் கங்கவல்லியில் தலா 5 செ.மீ, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 செ.மீ, கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் லக்கூர், நீலகிரி மாவட்டம் உதகை உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி