ஆப்நகரம்

“ஆகஸ்ட் 14, சசிகலா ரிலீஸ் இல்லை” சிறைத்துறை அளித்த தேதி விவரம், இதோ!

சசிகலா ஆகஸ்ட் 14ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆகிறார் என அதிகார்வபூர்வமில்லாத செய்தி வெளியாகியிருந்தது...

Samayam Tamil 26 Jun 2020, 11:15 am
முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகஸ்ட் 14ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என்ற செய்தி பொய் எனக் கர்நாடக சிறைத் துறை விளக்கம் அளித்துள்ளது.
Samayam Tamil “ஆகஸ்ட் 14 சசிகலா ரிலீஸ் இல்லை” சிறைத்துறை அளித்த தேதி விவரம், இதோ!
“ஆகஸ்ட் 14 சசிகலா ரிலீஸ் இல்லை” சிறைத்துறை அளித்த தேதி விவரம், இதோ!


சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையைக் கர்நாடக நீதிமன்றம் வழங்கியது.

நீதிமன்ற உத்தரவுப்படி சசிகலா, 2017 பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலாவின் தண்டனை காலம் 2021ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நிறைவடையும்.

இந்நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என ஒரு தகவல் நேற்று வெளியாகி தீயாகப் பரவியது. இதுகுறித்து கர்நாடக சிறைத்துறையிடம் செய்தி நிறுவனங்கள் விசாரித்தபோது பல்வேறு விளக்கங்களை அதிகாரிகள் வழங்கினர்.

அதிகாரிகள், “குற்றவாளி ஒருவரை விடுதலை செய்வதற்கு முன் பல விதிமுறைகள் உள்ளது. ஒருவேளை தண்டனை காலம் குறைக்கப்படுகிறது என்றால், அதுகுறித்து உயர் அதிகாரிகள் வழிகாட்டுதல் வேண்டும். இதைக் கணக்கிடும்போது, அவர்கள் பரோல் பெற்ற நாட்கள், பல விஷயங்கள் குறித்துப் பரிசீலிக்கப்படும்” என்றனர்.

Sathankulam Custodial Death: விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் மரணம்; கனிமொழி செஞ்ச அதிரடியைப் பாருங்க!

கர்நாடக சிறைத் துறை விதிகளின்படி, நன்னடத்தை காரணமாக ஒருவருக்குத் தண்டனை காலத்தில் மாதம் 3 நாட்கள் குறைக்கப்படும். அதே வேளையில் சிறப்பு விதிகளைப் பயன்படுத்தி அதிகபட்சமாக ஆண்டுக்கு 60 நாட்கள் வரை மட்டுமே குறைக்க முடியும். அப்படி ஆண்டுக்கு 60 நாட்கள் என வைத்துக் கொண்டால் 4 ஆண்டுக்கு 240 நாட்கள் குறையும்.

கர்நாடக அக்ரஹாரா சிறையிலிருந்து அடுத்த 30 நாட்களில் விடுதலை செய்யப்படும் குற்றவாளிகள் பட்டியல், ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுதலையாகும் குற்றவாளிகள் பட்டியல் என எதிலும் சசிகலா பெயர் இல்லை. அதே நேரத்தில் அந்த பட்டியலில் சசிகலா பெயரைச் சேர்க்க வாய்ப்புள்ளது.

சிறப்பு விதிகளைப் பயன்படுத்தி ஒருவேளை குற்றவாளி சசிகலாவிற்கு 240 நாட்கள் தண்டனை காலம் குறைக்கப்பட்டால், அவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுதலை ஆக வாய்ப்புள்ளது. இப்போதுவரை அப்படி எந்தவித முயற்சிகளும் நடத்தப்படவில்லை. இந்த நடவடிக்கைகளில் ஆளும் பாஜக ஈடுபட்டால் மட்டுமே இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

அடுத்த செய்தி