ஆப்நகரம்

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

TNN 17 Sep 2017, 2:59 pm
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil chances for heavy rain in tamilnadu chennai meteorology department
தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது;
மேற்கு மத்திய வங்க கடல் முதல் வடக்கு ஆந்திரம் வரை உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், வெப்பச்சலனத்தின் காரணமாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chances for heavy rain in tamilnadu-chennai meteorology department

அடுத்த செய்தி