ஆப்நகரம்

தமிழகம், புதுவையில் மித மழைக்கு வாய்ப்பு.!

தமிழகம் புதுவையில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

TNN 6 Dec 2017, 1:42 pm
தமிழகம் புதுவையில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil chances for rain in tamilnadu and puducherry
தமிழகம், புதுவையில் மித மழைக்கு வாய்ப்பு.!


சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியன பின்வருமாறு’

நேற்று தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது மசூலிபட்டினத்திற்கு தென்கிழக்கே 1160 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. வரும் டிச. 8 வரையிலான காலகட்டத்தில் இது வட மேற்கு திசையில் ஆந்திர கரையை நோக்கி நகரும். இதனால் தமிழக மீனவர்கள் அடுத்து 3 நாட்களுக்கு வங்க கடலில் ஆழ்கடல் பகுதிகளுக்கும், வட தமிழகம் தெற்கு ஆந்திர கடல் ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

அடுத்த இரண்டு நாட்களை பொருத்தவரையில், தமிழகம் புதுவையில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில பகுதிகளில் ஒரிரு முறை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக நெல்லை ஆயக்குடியில் 7 செ.மீ., மழையும், ராஜபாளையம், தென்காசி, அறந்தாங்கியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகயுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி