ஆப்நகரம்

தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு, மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

TNN 16 Sep 2017, 1:57 pm
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு, மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
Samayam Tamil chances for rain in tamilnadu and puducherry chennai meteorology department
தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் அதிகபட்சமாக 4 செ.மீட்டர் மழையும், திருப்புவனத்தில் 3 செ.மீட்டர் மழையும், வால்பாறையில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chances for rain in tamilnadu and puducherry-chennai meteorology department.

அடுத்த செய்தி