ஆப்நகரம்

அதிமுகவிற்கு ஷாக் கொடுக்கப் போகும் சசிகலா; அடுத்த அஸ்திரம் ரெடி!

வரும் மார்ச் மாதம் அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சசிகலா புதிய வியூகம் அமைத்துள்ளார்.

Samayam Tamil 28 Feb 2021, 1:35 pm
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை தி.நகர் இல்லத்தில் தங்கியுள்ள சசிகலா, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மவுனம் கலைத்துவிட்டார். ஆனால் அது அதிரடியாக இல்லாமல், அணிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற அழைப்பாக மட்டுமே இருந்தது. இதனால் சசிகலாவின் அதிரடி அரசியல் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Samayam Tamil chances for vk sasikala to freeze aiadmk two leaves symbol before tn assembly election 2021
அதிமுகவிற்கு ஷாக் கொடுக்கப் போகும் சசிகலா; அடுத்த அஸ்திரம் ரெடி!


பொதுச் செயலாளர் வழக்கு

முன்னதாக தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாடுகள் நிறைவடைந்த அதே நாளில், வழக்கறிஞர் மூலமாக அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். எனவே அதிரடி அரசியல் மெல்ல சூடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சசிகலாவை சந்தித்தது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஒரே இலக்கு அதிமுக

மறுபுறம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த அணிக்கு தினகரன் தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்றாவது அணிக்கு சசிகலாவின் ஆதரவு இருக்குமா என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சசிகலாவின் ஒரே இலக்கு அதிமுக மட்டுமே என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.


தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிக; அதிமுகவை சீண்டிய பிரேமலதா!

சசிகலாவின் நிலைப்பாடு

அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த நிலையில் தான், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றார். மீண்டும் திரும்பி வந்தவுடன் அதே பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பது தான் சசிகலாவின் நிலைப்பாடாக உள்ளது. பெங்களூருவில் இருந்து சென்னை வரும் வரை அதிமுக கொடி பொருத்திய காரில் பயணித்தது, ஜெயலலிதா பிறந்த நாளில் அதிமுக கொடி, அதிமுக தலைமை அலுவலக முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் வெளியிட்ட கடிதம் ஆகியவற்றின் மூலம் சசிகலாவின் வேட்கையை புரிந்து கொள்ளலாம்.

இரட்டை இலை சின்னம்

வரும் மார்ச் 15ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை தனக்கான உரிமையை பயன்படுத்திக் கொள்ள சசிகலா கோரிக்கை விடுப்பார். அதாவது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படும் ‘பி’ பார்மில் கையெழுத்திடும் உரிமை கோரி கடிதம் எழுத சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உடையும் கூட்டணி: என்ன ஆண்டவரே, உங்களுக்கும் அவருக்கும் இடையே லடாயாமே?

சின்னத்தை முடக்க பலே பிளான்

இதில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டால் அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறார். அதாவது பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை நடப்பு சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிட சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் அதிமுகவில் தனக்கான அதிகாரம் இல்லையென்றால், வேறு யாருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்று சசிகலா காய்கள் நகர்த்தி வருவது புரிகிறது.


ரஜினி வாழ்த்தும், இலவச அறிவிப்பும்; முதல் நாளே அர்ஜுன மூர்த்தி சர்ப்ரைஸ்!

ஆட்டம் காணப் போகும் அதிமுக

தற்போது கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் நடைபெறவுள்ளன. அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளிவந்த பிறகு, வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியாளர்கள் கூட்டம் அக்கட்சிக்குள் உருவாகும் என்று கூறப்படுகிறது. அவர்களை வைத்து சசிகலா நடத்தப் போகும் அரசியலும், கடைசி நேரத்தில் ஆட்டம் காணப் போகும் அதிமுகவும் என அதிரடிகளுக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர் அரசியல் விவரம் தெரிந்தவர்கள்.

அடுத்த செய்தி